நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் தொலைத்தொடர்புத் துறை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது:  ஃபஹ்மி

ஜெனீவா:

ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள் மலேசியாவின் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியை ஒரு முன்மாதிரியாக மாற்றியுள்ளன.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை கூறினார்.

அல்ஜீரியா  தகவல் தொலைத்தொடர்பு இலக்கவியல் அமைச்சர் சிட் அலி ஜெரூக்கி, செனகல் அமைச்சர் அலியூன் சால் ஆகியோருடன் சந்திப்பி நடைபெற்றது.

இந்த இருதரப்பு சந்திப்பில் அவர்கள் மலேசியாவிலிருந்து கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

குறிப்பாக தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு மேம்பாடு, இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்துவதில்.

மலேசியா தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைப் பார்த்து, அதன் அடிப்படையில் அளவுகோல்களை அமைக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

ஜெனீவாவில் பெர்னாமாவின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset