
செய்திகள் மலேசியா
120 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தரமற்ற பால் விநியோகம்: 3 பேரை எம்ஏசிசி விசாரித்து வருகிறது
புத்ராஜெயா:
அரசுத் துறைக்கு 120 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தரமற்ற பால் பவுடரை வழங்கியதற்காக ஒரு கும்பலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை எம்சிசி விசாரித்து வருகிறது.
உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கோலாலம்பூரில் உள்ள மூன்று குடியிருப்புகள், ஒரு நிறுவனம் ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்டன.
அவை பல்வேறு ஆவணங்களுக்கான சேமிப்பு இடமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
2019 முதல் பால் பவுடர் விநியோகத்திற்கான ஒப்பந்த ஆவணங்களை கைப்பற்றுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையில் 70 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுமார் 80 கணக்குகளும் முடக்கப்பட்டதாக வட்டாரம் தெரிவித்தது.
இந்த விசாரணை எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16, பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் 2001 இன் கீழ் நடத்தப்பட்டது.
அதே நேரத்தில் வருமான வரிச் சட்டம் 1967 இன் கீழ் விசாரணை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm