
செய்திகள் மலேசியா
சட்டவிரோத தொழிலாளர்களுக்கு தலா 8,000 ரிங்கிட் கட்டணம்; 2,368 முதலாளிகள் கைது செய்யப்படுள்ளனர்: டத்தோ ஜக்காரியா
புத்ராஜெயா:
சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தலைக்கு 8,000 ரிங்கிட் கட்டணம் செலுத்திய முதலாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளது.
குடிநுழைவு இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் இதனை கூறினார்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்ட போதிலும் பிடிவாதமான முதலாளிகள் குறைந்த சம்பளத்திற்கு சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை பணியமர்த்துகின்றனர்.
இதனால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதலாளிகள் உள்ளனர்.
அவர்கள் சட்டவிரோத முகவர்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு தொழிலாளர்களை 8,000 ரிங்கிட் கட்டணத்தில் பெறுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் சட்டவிரோத தொழிலாளர்களை பணியமர்த்தியதற்காக 2,368 முதலாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு 40 மில்லியன் ரிங்கிட்டும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 1,034 முதலாளிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm