
செய்திகள் மலேசியா
குறைபாடுகள் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட கியா, யமாஹா, பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களைத் திரும்ப பெற ஜேபிஜே அழைப்பு
புத்ரா ஜெயா :
உபகரணங்கள் பழுது, அமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் சுமார் 8,322 கியா, யமஹா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களை ஆய்வுக்காக சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே திரும்ப பெற அழைப்பு விடுத்துள்ளது.
2010-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான 5,123 ரியோ யுபி மாடல் கியா கார்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து துறை இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.
இந்தக் வாகனங்களின் ஒரு முக்கிய மின் கட்டுப்பாட்டு பகுதியில் கோளாறு ஏற்பட்டிருப்பதால் தீப்பற்ற வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமல்லாமல், சுமார் 1649 யமாஹா MT09, 1,369 Tracer 9 GT வகை மோட்டார் சைச்கிள்களில் சென்சர் கருவியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக திரும்ப பெறப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து, 149 Yamaha Tenere 700 வகை மோட்டார் சைக்கிள்களில் ஏற்பட்டுள்ள கிளச் கோளாறு காரணமாக அவற்றை ஆய்வுக்காக சாலை போக்குவரத்து துறை திரும்ப பெற்றுள்ளது.
2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மாடல் S 580 e, GLC 300 4MATIC, EQS 500, AMG SL 43, EQE 53 மற்றும் EQS 53 என மொத்தம் 32 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் ஃபியூஸ் பெட்டிகளில் கோளாறு இருப்பதைச் சரி செய்ய திரும்பப் பெறப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட மாடல்களைக் கொண்ட அனைத்து உரிமையாளர்களும் திரும்பப் பெறுதல் மற்றும் ஆய்வு விரைவில் செய்யப்படுவதற்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு உரிமையாளர்கள் எந்த விற்பனை மற்றும் சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm