நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகாதார அமைப்பில் செயற்கை நுண்ணறிவு, தரவுகள் பகுப்பாய்வுகள் மேம்படுத்தப்படும்: ஜுல்கிஃப்லி அஹமத்

கோலாலம்பூர்:

நாட்டின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுகளின் பயன்பாட்டை வலுப்படுத்த சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக அதன் அமைச்சர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார். 

சுகாதாரத் துறையில் தற்போது எதிர்நோக்கும் சிக்கலைக் களைவதற்கு ஏதுவாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான அணுகுமுறையை அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

மனிதவளங்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை. 

மாறாக, நோய் பரவலை ஆரம்பக்கட்டத்தில் கண்டறியவும் அதன் செயல்திறனை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது 80 கிளினிக்குகளில் கிளவுட்-அடிப்படையிலான மருத்துவ மேலாண்மை அமைப்பு (CCMS) செயல்படுத்தப்பட்டுள்ளதை ஜுல்கிஃப்லி சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset