
செய்திகள் மலேசியா
பள்ளி வேன் விபத்து தொடர்பில் ஜொகூர் மாநில கல்வி இலாகா உள் விசாரணையை நடத்துகிறது: அஸ்னான்
ஜொகூர்பாரு:
பள்ளி வேன் விபத்து தொடர்பில் ஜொகூர் மாநில கல்வி இலாகா உள் விசாரணையை நடத்தி வருகிறது.
ஜொகூர் மாநில கல்வி, தகவல் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர் அஸ்னான் தமின் இதனை கூறினார்.
பண்டார் டத்தோ ஓனில் ஒரு பள்ளி வேன், சிமெண்ட் டிரெய்லருடன் மோதிய விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தொராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பள்ளி வேன் விபத்து தொடர்பில் ஜொகூர் கல்வி இலாகா உள் விசாரணையை நடத்துகிறது.
மேலும் விசாரணையில் மாணவர்கள் ஏற்றிச் சென்ற வேனின் கொள்ளளவு குறித்து கவனம் செலுத்தப்படும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து மிகத் தொலைவில் அமைந்துள்ளது என்பது எங்களுக்குத் தெரியும்.
எனவே, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப உதவக் கூடிய பிற வேன் நடத்துனர்கள் இருப்பதற்கான தகவல்களைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.
விபத்தில் சிக்கிய மாணவர்களை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm