நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகரைக் காவல்துறை தேடி வருகிறது 

பெட்டாலிங் ஜெயா: 

சிப்பாங்கில் உள்ள ஓர் இந்து ஆலயத்தில் 27 வயதுமிக்க இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நம்பப்படும் கோவில் அர்ச்சகர் ஒருவரைப் போலீஸ் தேடி வருகின்றனர். 

இந்த தகவலைச் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹமான் கூறினார். 

பூஜைக்கான நீரை தனது முகத்திலும் உடல் முழுவதும் தெளித்ததுடன் மட்டுமல்லாமல் தம்மை மானபங்கம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த ஜூலை 4ஆம் தேதி கொடுத்த போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையைக் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 354இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று அவர் சொன்னார். 

இந்த விவகாரத்தை யாரும் இனம் அல்லது சமயம் சார்ந்த விவகாரமாக நெருக்கடி கிளப்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset