
செய்திகள் மலேசியா
பகாங் சுல்தானை உட்படுத்திய காணொலி: போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது
பெக்கான்:
பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா படத்தை AI வடிவில் கொண்டு போலி காணொளி ஒன்றை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பகாங் மாநில போலீஸ் தரப்பு ஒரு போலிஸ் புகார் கிடைக்கப்பெற்றதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹ்யா ஒத்மான் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் தொடர்பாக பகாங் அரண்மனை தரப்பு போலீசிடம் புகார் ஒன்றை அளித்தது.
போலி டிக்டாக் கணக்கு ஒன்று இருந்ததாகவும் தொடர்ந்து அது செயல்பாட்டில் உள்ளதாக அவர் சொன்னார்.
1998 தொடர்பு, பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
அரசவை கழகத்தை உட்படுத்திய விவகாரங்களில் பொதுமக்கள் மிகுந்த கவனமுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு யஹ்யா ஒத்மான் அறிவுரை கூறினார்.
பகாங் மாநில மக்களுக்கு பகாங் சுல்தான் உதவிகளை வழங்குவதாக சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா படத்தை AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி காணொலி ஒன்று வெளியான நிலையில் இஸ்தானா பகாங் புகார் அளித்தது.
இது கடந்த ஜூலை 6ஆம் தேதி நிகழ்ந்ததாகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 5:29 pm
பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகரைக் காவல்துறை தேடி வருகிறது
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am