நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலானில் எந்த பிளவும் இல்லை;13ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களின் தேவைகளை பிரதமர் பூர்த்தி செய்வார்: டத்தோஸ்ரீ ரமணன்

சுபாங்ஜெயா: 

13ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களின் தேவைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நிச்சயம் பூர்த்தி செய்வார்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

கெஅடிலான் கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலுக்குப்பின் கெஅடிலான் கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் நிறைவு பெறுகிறது.

குறிப்பாக அக்கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

உண்மையில் இது போன்ற வதந்தி தகவல்களை யார் பரப்புகின்றனர் என்று எனக்கு தெரியவில்லை.

கெஅடிலான் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அக்கட்சி இன்னும் வலுவாக தான் உள்ளது.

அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கமும் நிலையாக தான் உள்ளது.

ஆகவே பொய்யான தகவல்களை பரப்புவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதே போன்று 13ஆவது மலேசியத் திட்டம் குறித்த பிரச்சினையும் தற்போது நாட்டில் எழுந்துள்ளது.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பது பிரதமரின் முதன்மை இலக்காகும்.

அதன் அடிப்படையில் 13ஆவது மலேசியத் திட்டத்தில் நிச்சயம் அவர் இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்.

இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அவர் இந்தியர்களுக்கு இதை செய்தேன். சீனர் மலாய்க்காரர்களுக்கு இதை செய்தேன் என அவர் வெளிப்படையாக கூற மாட்டார்.

இருந்தாலும் சமூக மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து உரிய நடவடிக்கைகளையும் பிரதமர் மேற்கொள்வார்.

சுபாங் இன்தி அனைத்துலக கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சமூக தொழில்முனைவோர் கருத்தரங்கிற்கு பின் டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset