நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிபதி நியமனங்கள் விவகாரம்; நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு மறைக்க எதுவும் இல்லை: ரபிசி

கோலாலம்பூர்:

நீதிபதி நியமனங்கள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு மறைக்க எதுவும் இல்லை.

முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

நீதித்துறை நியமனங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவின் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார்.

மேலும் உயர் நீதித்துறை நியமனங்களில் டத்தோஶ்ரீ அன்வாரின் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் முயற்சிகளையும் மறுத்தார்.

அதனால் தான் இந்த நடவடிக்கைகள் நாங்கள் பரிந்துரைத்தபடி தொடர்வது நல்லது.

மேலும் நாடாளுமன்ற மட்டத்தில் பிரதமருக்கு மறைக்க எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

குறிப்பாக நிறுவன சீர்திருத்தம் குறித்த நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவின் உண்மையான நிலைமையை விளக்க அழைத்தால் பிரதமர் கலந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன் என்று ரபிசி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset