
செய்திகள் மலேசியா
திருவண்ணாமலை போன்று பஞ்சமூர்த்தி ரத ஊர்வலத்தை நடத்துவது செனவாங் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் சிறப்பு அம்சமாகும்: டத்தோ சிவக்குமார்
செனவாங்:
திருவண்ணாமலை போன்று பஞ்சமூர்த்தி 5 ரத ஊர்வலத்தை நடத்துவது செனவாங் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டேன். ஆலயத் தலைவர் விஜயனின் அழைப்பின் பேரில் இங்கு வந்தேன்.
இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக பஞ்சமூர்த்தி ரத ஊர்வலம் விளங்குகிறது. குறிப்பாக 5 ரதங்கள் ஒன்று சேர ஊர்வலமாக வருகின்றன.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடைபெறுவது போல் இங்கும் ரத ஊர்வலும் பூஜைகளும் நடந்து வருகிறது.
இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துகின்றனர்.
இவ்வேளையில் ஆலயத் தலைவர் விஜயனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இதுபோன்ற விழாக்களில் அதிகமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
காரணம் இந்து சமயம் நமது உரிமை. அதை ஒற்றுமையாக நாம் பாதுகாப்போம் வளர்ப்போம் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
முன்னதாக செனவாங் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் ஆலயம் மஹிமாவில் இணைந்ததற்கான சான்றிழ் ஆலயத் தலைவர் விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 3:33 pm
சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 7, 2025, 2:05 pm