
செய்திகள் மலேசியா
சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
கோத்தா பாரு:
கடந்த 2023ஆம் ஆண்டு அப்போது 11 வயதாக இருந்த தனது சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த மூன்று குற்றத்திற்காக அப்பெண்ணின் அண்ணன் மீது இங்குள்ள கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
இருப்பினும், நீதிபதி சுல்கிஃப்ளி அப்துல்லா முன்னிலை குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 20 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
முதல் குற்றமானது ஏப்ரல் 2023ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சகோதரி 11 வயதாக இருந்த போது அந்நபர் பாலியல் வல்லுறவு புரிந்தான். மீண்டும் டிசம்பர் 2024ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சகோதரியைத் தனது அறையில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டான்.
இந்த குற்றங்கள் யாவும் கிளாந்தான் மாநிலத்தின் பச்சோக் பகுதியில் உள்ள ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் சிறை தண்டனை, குறைந்தது 10 பிரம்படிகள் தண்டனையாக வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 376(3)இன் கீழ் அவ்வாடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 30 ஆயிரம் ரிங்கிட் தொகையுடன் கூடிய நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சகோதரியைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும் .
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 2:05 pm