
செய்திகள் மலேசியா
நீதித்துறையில் நெருக்கடி சூழல்: பிரதமர் அன்வார் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கவுரை வழங்க வேண்டும்: திரெசா கோக்
கோலாலம்பூர்:
நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் நீதித்துறை சார்ந்த அமைச்சரும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான விளக்கவுரை வழங்க வேண்டும் என்று செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் வலியுறுத்தினார்
நீதித்துறையின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் கட்டிக்காப்பதில் உண்மையும் நேர்மைத்தன்மையும் அவசியமாகிறது. இதுவே அரசாங்கத்தின் அடிப்படை முயற்சியாக இருக்க வேண்டும்.
நீதித்துறை சர்ச்சையில் அரசாங்கம் மௌனம் காப்பதும் தாமதமாக செயல்படுவதும் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையானது பாழாகி போகும் என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களே நீதித்துறை நியமனங்களில் உள்ள சர்ச்சைகள், விவகாரங்களை எடுத்துரைத்தனர். ஆக, பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்க அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 3:33 pm
சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 7, 2025, 2:05 pm