நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போனதாக நம்பப்படும் 6 பேர் ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்

ஜித்ரா:

காணாமல் போனதாக நம்பப்படும் 6 பேர் ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

கெடா தீயணைப்பு, மீட்புத் துறையின்  தலைவர் அஹ்மத் அமினுடின் அப்துல் ரஹிம் இதனை உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட 6 பேரும் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின்  உடல்கள் ஜித்ரா அருகே உள்ள சுங்கை கோரோக்கில் ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டது.

ஆண், பெண், மூன்று குழந்தைகள்,  ஒரு கைக் குழந்தையும் மீட்கப்பட்ட உடல்களில் அடங்கும்.

இன்று காலை 8.38 மணிக்கு கார் ஆற்றில் விழுந்தது குறித்து தனது துறைக்கு அழைப்பு வந்தது.

புரோட்டான் ஈஸ்வரா செடான் கார் ஆற்றில் இருந்ததாகவும், வாகனத்தில் இருந்த ஆறு பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் காரின் இருந்த உடல்களை மீட்டனர். 

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களால் அடையாளம் காணும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset