நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழக்கு; விசாரணை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: ஷம்சுல்

புத்ராஜெயா:

போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழக்கு தொடர்பான விசாரணை முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

தேசிய தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் இதனை தெரிவித்தார்.

கெடாவின் சுங்கைப்பட்டானியில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களைத் தயாரித்து விற்பனை செய்தாக கூறப்படுகிறது.

இந்த  நடவடிக்கை குறித்த முழுமையான விசாரணையின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

தற்போது விசாரணை இன்னும் நடந்து வருகிறது. வழக்கு குறித்த முழுமையான அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை.

மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் நடந்த ஜெலாஜா மடானி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று, போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு இருதய நோயாளி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset