
செய்திகள் மலேசியா
நீதித்துறை பிரச்சினைகளில் வி.கே. லிங்கம் விவகாரம் போன்று மீண்டும் நிகழலாம் என்பதால் அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: ரபிசி
கோலாலம்பூர்:
நீதித்துறை பிரச்சினைகளில் வி.கே. லிங்கம் விவகாரம் போன்று மீண்டும் நிகழலாம் என்ற அச்சம் உள்ளதால் அரச விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்க வேண்டும்.
9 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமையேற்ற பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
சமீபத்திய நீதித்துறை நியமன ஊழல் வி.கே. லிங்கம் ஊழலை ஒத்திருக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
புதிய நீதிபதிகளை நியமிப்பதற்காக நீதித்துறை நியமன ஆணையம் அரசாங்கத்திற்கு அனுப்பிய பரிந்துரைகள் சரியான வேகத்தில் செயல்படுத்தப்படவில்லை.
இதனால் காலியிடங்களை நிரப்பும் பணிகள் அவசரமாகின்றன.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் தலைவர் பதவிகளுக்கான பரிந்துரைகள் துன் தெங்கு மைமுன் துவான் மாட் ஓய்வு பெறுவதற்கு முன்பே ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டு பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆனால் தற்போதைய காலியிடங்கள் ஏற்படும் வரை நியமனங்கள் செய்யப்படவில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது என்று ரபிசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 3:33 pm
சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 7, 2025, 2:05 pm