நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகர், கிராமப்புற மாணவர்களுக்கு இடையிலான ஸ்டேம்  கற்றல் இடைவெளியைக் குறைக்க அமைச்சு இலக்கு: சாங் லி காங்

கோலாலம்பூர்:

நகர், கிராமப்புற மாணவர்களுக்கு இடையிலான ஸ்டேம் கற்றல் இடைவெளியைக் குறைக்க அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் இதனை கூறினார்.

நகர்ப்புற,  கிராமப்புற மாணவர்களுக்கு இடையேயான ஸ்டேம் கற்றல் இடைவெளியை குறைக்க வேண்டும்.

குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில், கிராமப்புற பள்ளிகளில் பல்வேறு உயர் தாக்கத் திட்டங்கள் மூலம் நிரப்ப வேண்டும்.

இந்த அணுகுமுறை 100 விஞ்ஞானிகள், 100 பள்ளிகள், 100 நாட்கள் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.

இத்திட்டம் இங்குள்ள தியாரா பெர்மா இடைநிலைப்பள்ளியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

எந்த இடமாக இருந்தாலும், அனைத்து மாணவர்களுக்கும் ஸ்டேம் கல்விக்கான சீரான அணுகலை உறுதி செய்வதில் அமைச்சு தெளிவாக உள்ளது.

அறிவியலின் வெளிப்பாட்டை மாணவர்கள் முழுமையாக உணர முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும்  மாவட்ட மட்டத்திலும் கிராமப்புற பள்ளிகளிலும் பயணிக்கும் போர்னியோ அறிவியல் சாகசம் போன்ற திட்டங்களையும் அமைச்சு தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset