
செய்திகள் மலேசியா
13ஆவது மலேசியத் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான மேம்பாடுகள் பரிந்துரைகளோடு நின்று விடக்கூடாது: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
13ஆவது மலேசியத் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான மேம்பாடுகள் வெறும் பரிந்துரைகளோடு நின்று விடக்கூடாது.
முறையாக அமலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என நீலாய் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளரும் சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவருமான டத்தோ வி. சரவணக் குமார் இதனை வலியுறுத்தினார்.
மடானி அரசாங்கத்தின் 13ஆவது மலேசியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்திய சமுதாயத்தின் மேம்பாடு வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றனர்.
பல தரப்பில் இருந்து இந்த பரிந்துரைகள் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இம்முயற்சியை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.
ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் பரிந்துரைகளோடு நின்று விடக் கூடாது. இப்பரிந்துரைகள் அத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.
அதே வேளையில் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான அத்திட்டங்கள் அமலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மேலும் இது முழுமையாக கண்கானிக்கப்பட வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 3:33 pm
சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 7, 2025, 2:05 pm