
செய்திகள் மலேசியா
கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம் முழு கருங்கல் திருத்தலமாக மாற்றியமைக்கப்படும்: டான்ஶ்ரீ நடராஜா
கோலாலம்பூர்:
தலைநகர் கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம் முழு கருங்கல் திருத்தலமாக மாற்றியமைக்கப்படும்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
மலேசியா திருநாட்டில் பழமை, புகழ் வாய்ந்ததுமான கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த 2012ஆம் ஆண்டு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது நமது மரபாகும்.
அந்த வகையில் உலக மக்கள் அனைவரும் வேண்டுதலையும் முழு முதலாய் நின்று நிறைவேற்றி தந்தருளும் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் தற்பொழுது மீண்டும் புனரமைக்கப்படுகிறது.
ஆலயத்தின் முகப்பு நுழைவாயில், தூண்கள், 32 விநாயகர் பீடங்கள், மணிமண்டபம் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கப்பட உள்ளது.
பக்தர்கள், ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இம்முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளது.
தங்க விமானம் மீண்டும் மெருகூட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் இவ்வாண்டுக்குள் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் திருப்பணி தொடக்க பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது
சிவஸ்ரீ சிவகுமார் மற்றும் சிவஸ்ரீ சிவனாந்தா குருக்கள் ஆகியோர் இந்த சிறப்பு பூஜையை நடத்தி வைத்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் டத்தோ சிவகுமார், சந்திரசேகரன் , நாராயணசாமி, டத்தோ சுரேஷ்குமார், பொருளாளர் டத்தோ அழகன், வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 3:33 pm
சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 7, 2025, 2:05 pm