நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பி40 மாணவர்களுக்காக LIONS FOCUS4SIGHT திட்டம் அறிமுகம் கண்டது: லையன்ஸ் கிளப் கோலாலம்பூருடன் இணைந்து FOCUS POINT நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து 

பெட்டாலிங் ஜெயா: 

FOCUS POINT CARING HEARTS CHARITY FOUNDATION எனும் அறவாரியத்துடன் இணைந்து THE LIONS CLUB OF KUALA LUMPUR NORTH அரசு சாரா இயக்கம் ஒன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

இதன் மூலம் LIONS FOCUS4SIGHT SCHOOL VISION PROGRAMME திட்டத்தை முன்னெடுக்கப்படும் என்று தி லையன்ஸ் கிளப் கோலாலம்பூர் நோர்த் அறிவித்தது 

கிள்ளான் பள்ளத்தாகில் உள்ள அரசாங்க ஆரம்பப் பள்ளியின் பி40 தரப்பு மாணவர்களுக்கு பார்வைத் திறன், அதன் சுகாதார அம்சங்கள் மேலோங்க செய்ய இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக LIONS CLUB KUALA LUMPUR NORTH கிளப்பின் தலைவர் குமாரி கார்மென் சியா முன் யீ கூறினார். 

LIONS FOCUS4SIGHT SCHOOL VISION PROGRAMME 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எட்டு அரசு ஆரம்பப்பள்ளிகளில் நேரடியாக கண் பார்வை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 

குறைவான பார்வை திறன் என்பது ஒரு மாணவன் அல்லது மாணவியின் கல்வி கற்றலை சிக்கலுக்கு வழிவகுக்கும். இதனால் ஒட்டுமொத்த மேம்பாட்டினை அடைய முடியாத ஒரு சூழல் உண்டாகும். 

பி40 தரப்பில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்த கிட்டத்தட்ட 1000 ஜோடி மூக்குக் கண்ணாடிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்ப்பட்டுள்ளன. LIONS CLUB KL NORTH அமைப்பு மற்ற LIONS CLUBகளுடன் இணைந்து இந்த திட்டத்திற்கான நிதியை ஒருங்கிணைக்கும் என்று கார்மென் சியா குறிப்பிட்டார். 

முன்னதாக, LIONS CLUB OF KL NORTH, FOCUS POINT CARING HEARTS CHARITY இரு அமைப்புகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சியில் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்பு நடவடிக்கை பிரிவு தலைவருமான பி.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset