நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக வர்த்தக அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தங்களுக்கு மலேசியா ஆதரவு: பிரதமர் அன்வார்

ரியோ டி ஜெனிரோ:

உலக வர்த்தக அமைப்பின் (WTO) விரிவான சீர்திருத்தத்தை மலேசியா முழுமையாக ஆதரிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் வர்த்தகம், காலநிலை கொள்கை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்த அமைப்பு புத்துயிர் பெறுவது அவசியம் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார். 

இந்தச் சீர்த்திருத்த நடவடிக்கைகள் உலக நாடுகளின் கொள்கையைக் கட்டுப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் கேட்டுக் கொண்டார்.

உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் Dr Ngozi Okonjo-Iweala-வை சந்தித்த பிறகு பிரதமர் அன்வார் இதனை கூறினார்.

 Dr Ngozi Okonjo-Iweala நைஜீரிய பொருளாதார நிபுணராவார்.

அவர் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் WTO இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.

அவர் WTO இயக்குநர் ஜெனரலாக தலைமை தாங்கிய முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset