நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் மனிதாபிமான குற்றங்கள்; உலக நாடுகள் மௌனமாக இருக்கக்கூடாது: பிரதமர் அன்வார்

ரியோ டி ஜெனிரோ:

காசாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனிதாபிமான குற்றங்களையும், ஈரானியர்கள் மீதான கொடுமைகளையும் உலகநாடுகள் புறக்கணிக்கக் கூடாது என மலேசியா மீண்டும் வலியுறுத்தவுள்ளதாக  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

உலகின் எதிர்காலம் பிரிவினைகளாலோ, புவிசார் அரசியல் மோதல்களாலோ கட்டுப்படுத்தப்படக் கூடாது.

மாறாக, நியாயமான, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய இலக்கவியல் எதிர்காலத்திற்காக, ஒத்துழைப்பு, பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றின் கீழ் அது வடிவமைக்கப்பட வேண்டும் எனபிரதமர் கூறினார்.

பன்னாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள், மற்றும் நெறிமுறை அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஆளுகை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அம்மாநாடு நடைபெற்றது..

இவ்வாண்டு ஜூலை 3ஆம் தேதி வரை காசாவில் சுமார் 58,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து வகையான அடக்குமுறைகளையும் எதிர்த்து, BRICS அமைப்பு, மனித மாண்பை உயர்த்த வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை பிரேசில், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17ஆவது BRICS உச்சநிலை மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்று உரையாற்றிய போது, பிரதமர் ன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset