
செய்திகள் மலேசியா
செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் கட்டப்படும் 42 மாடிக் கட்டட திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்: பெற்றோர்கள் போர்க்கொடி
கோலாலம்பூர்:
செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் 42 மாடிக் கொண்ட கட்டட திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதிக்கு முன் கூடிய பெற்றோர்களும் பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
செராஸ் தமிழ்ப்பள்ளி நீண்ட கால வரலாற்றை கொண்டதாகும். இப் பள்ளியில் தற்போது 250க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கு அருகில் 42 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்படவுள்ளது.
இப் புதிய கட்டடம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே இப் பிரச்சினை வந்த போது அனைவரும் சேர்ந்து போராடியதால் திட்டம் நிறுத்தப்பட்டது.
ஆனால் இப்போது அக் கட்டடத்தின் கட்டுமானப் பணி மீண்டும் தொடங்கி விட்டது.
கட்டடத்தின் அடித்தளம் அமைக்கப்படும் பணி மிகப் பெரிய சத்தத்தை ஏற்படுகிறது.
இதனால் பல மாணவர்கள் காது வலி, பேசுவது விளங்காமல் போகும் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர்.
மேலும் பெரிய பெரிய லோரிகள் இங்கு வந்து செல்கின்றன. தூசி பிரச்சினை ஏற்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் இக்கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று பள்ளி வாரியக் குழு தலைவர் குமார் கூறினார்.
இக் கட்டுமான திட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகளை டத்தோ பண்டார் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கையாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 3:33 pm
சொந்த சகோதரியைப் பாலியல் வல்லுறவு புரிந்த அண்ணன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 7, 2025, 2:05 pm