நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்னும் 10 ஆண்டுகளில் மசீச சீனர்களின் ஆதரவை முழுமையாக இழக்கும்: அரசியல் ஆய்வாளர் கருத்து

பெட்டாலிங் ஜெயா: 

இன்னும் 10 ஆண்டுகளில் மலேசிய சீன சங்கம், மசீச சீனர்களின் முழுமையான ஆதரவை இழக்கக்கூடும் என்று அரசியல் ஆய்வளர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து மசீச மீது வைக்கப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை அக்கட்சி பூர்த்தி செய்ய தவறியதையடுத்த கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து சீனர்கள் தங்கள் ஆதரவை ஜனநாயகச் செயல்கட்சி, டிஏபி-க்கு வழங்க தொடங்கியதாக தஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் கருத்துரைத்தார். 

இன்னும் 20 ஆண்டுகளில் சீனர்கள் முழுமையாக டிஏபி கட்சியை ஆதரிப்பார்கள் என்றால் அதை மறுக்க இயலாது என்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல், மசீச கட்சி இழந்த ஆதரவைப் பெற எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் டிஏபிக்கான சீனர்களின் ஆதரவை அவர்களால் அசைக்க இயலாது என்று ஜேம்ஸ் சின் திட்டவட்டமாக கூறினார். 

மலேசியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக அங்கம் வகிக்கும் மசீச சீன நலன்களுக்கான முக்கிய குரலாக ஒலித்தது. 

ஆனால் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆவது பொது தேர்தலில்  மசீச 40 தொகுதிகள் போட்டியிட்டு 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதன் பின்னர்தான், சீனர்களிடையே அக்கட்சிக்கான செல்வாக்கு குறைய தொடங்கியதையும் ஜேம்ஸ் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset