
செய்திகள் மலேசியா
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
கோத்தா கினாபாலு:
16-ஆவது சபா மாநில சட்டமன்றம் முன் கூட்டியே கலைக்கப்படாவிட்டால் இவ்வாண்டு நவம்பர் 11-ஆம் தேதி தானாகவே கலைந்து விடும் என்று அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் ட Datuk Seri Kadzim M Yahya தெரிவித்தார்.
நவம்பர் 11-ஆம் தேதி சட்டமன்றத்தின் 5 ஆண்டுகள் தவணை காலம் நிறைவடைவதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றம் தானாகவே கலைக்கப்படும் தேதி குறித்து பொதுமக்களிடையே சில தவறான புரிதல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்,
சிலர் சபா மாநில சட்டமன்றம் இவ்வாண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி என்று தெரிவித்தனர். அது முற்றிலும் தவறான தகவல் என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாள்களுக்குள் மாநிலத்திற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm