செய்திகள் மலேசியா
மலேசியாவின் எண்ணெய் விநியோகம், விமானத் துறை குறித்து நாளை அவசர ஆலோசனை: பொருளாதார அமைச்சர் அறிவிப்பு
ஜொகூர் பாரு:
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றத்தால், மலேசியாவின் போக்குவரத்து, விமானத் துறை, எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க நாளை தேசிய பொருளாதார நடவடிக்கை குழு (MTEN) கூடவுள்ளது.
தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இந்த முக்கியக் கூட்டத்திற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ரஹிம் தலைமை தாங்குவார் என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நசீர் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் பாருவில் நடைபெற்ற 'Rahmah Kasih Sayang ' விற்பனைத் திட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான், இஸ்ரேல் இடையிலான மோதலால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நதி முடங்கியுள்ளதால், பெட்ரோலியம், டீசல் சார்ந்த பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
இந்த விநியோகத் தட்டுப்பாடானது உற்பத்தி, விநியோகச் செலவுகளை அதிகரித்து, நாட்டின் பணவீக்க விகிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மலேசியாவின் பணவீக்கம் 1.4 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போதைய உலகளாவிய சூழலால் வரும் மாதங்களில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாததாகலாம் எனக் கருதப்படுகிறது.
பிப்ரவரி 28 முதல் தீவிரமடைந்துள்ள இந்த மோதல்களால், ஈரான், ஓமனுக்கு இடைப்பட்ட கடல்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியக் கூறுகளின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை அரசு இக்கூட்டத்தின் வாயிலாக முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
