நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“கிளாந்தானில் மார்ச் 19-ஆம் தேதி நோன்புப் பெருநாளின் பொது விடுமுறையாகும்”: டத்தோ முஹம்மத் நசுருடின் அறிவிப்பு

கிளாந்தான்:

இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 19-ஆம் தேதி வியாழக்கிழமையை கிளாந்தான் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை நாளாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கிளாந்தான் மாநிலத்தின் முதலமைச்சர் டத்தோ முஹம்மத் நசுருடின் தாவூத் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரமலான் மாதத்தின் 29-ஆம் நாளைக் குறிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த கூடுதல் விடுமுறையானது, பொதுமக்கள் தங்கள் பெருநாள் முன்னேற்பாடுகளைச் செம்மையாகச் செய்யவும், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்று மாநில அரசு நம்புகிறது. மக்கள் சிரமமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதை உறுதி செய்வதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விடுமுறை குறித்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், மக்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்தக் கூடுதல் காலத்தைப் பயன்படுத்தித் தங்கள் குடும்பத்தினருடன் தரமான நேரத்தைச் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

மேலும், அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் தமது மனமார்ந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மாநில அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு, பெருநாள் கொண்டாடத் தயாராகி வரும் கிளந்தான் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset