நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனவாத கருத்து சர்ச்சை: ஜம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம்

கோலாலம்பூர்: 

ஜம்ரி வினோத் மீது இன்று கோலாலம்பூரில் உள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து காலை 8.30 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறும் தகவல் ஒன்று சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

இந்திய சமூகத்தை குறிவைத்து இனவாத உணர்வுகளை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும், மேலும் பிப்ரவரி 7 ஆம் தேதி அனுமதியின்றி அமைக்கப்பட்ட கோயிலைச் சுற்றியுள்ள விவகாரத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாகவும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் பரவும் தகவலில், அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவருக்கு எதிராக சுமத்தப்படவுள்ள துல்லியமான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், ஜம்ரி வினோத்தின் வழக்கறிஞர் ஹனீஃப் கத்ரி அப்துல்லா, தனது வாடிக்கையாளர் இன்று குற்றஞ்சாட்டப்படலாம் என்றாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் பெறப்படவில்லை என நேற்று இரவு தெரிவித்தார். 

முன்னதாக, நாட்டின் காவல்துறைத் தலைவர் டத்தீ ஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில், ஜம்ரி வினோத், செயற்பாட்டாளர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோரை கண்டறிந்து நாட்டிற்கு திரும்பக் கொண்டு வர தாய்லாந்து அதிகாரிகளுடன் காவல்துறை இணைந்து செயல்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset