செய்திகள் மலேசியா
5 கி.மீ பயணத்திற்கு 80 ரிங்கிட்டா?: விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி ஓட்டுநர் கைது
செப்பாங்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் இரண்டாம் முனையத்தில் சட்டவிரோதமாக டாக்சி சேவை வழங்கிய பெரோடுவா அல்சா கார் ஓட்டுநர் ஒருவரை நேற்று அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஓட்டுநர் இந்தோனேசிய பயணியிடமிருந்து இரண்டாம் முனையத்திலிருந்து முதல் முனையம் வரை செல்ல 80 ரிங்கிட் கட்டணம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு முனையங்களுக்கிடையிலான தூரம் சுமார் 5 கிலோமீட்டர் மட்டுமே என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணத்திற்கான கட்டணம் இலக்கை அடைந்த பிறகு செலுத்துமாறு அவர் கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலுக்காக நிலப் பொதுப் போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 205(1) கீழ் குற்றம் சாட்டப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 10:06 am
செக்கு சந்திரா வீட்டில் தாக்குதல்: திட்டமிட்டவர் உட்பட 12 பேர் கைது
March 16, 2026, 9:46 am
இனவாத கருத்து சர்ச்சை: ஜம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
