செய்திகள் மலேசியா
கெடாவில் புதிய இந்து மின் சுடலை கட்டுவதற்கு மடானி அரசாங்கம் 25 லட்சம் ரிங்கிட் மானியம்: சண்முகம் மூக்கன்
சுங்கை பட்டாணி:
கெடா மாநிலத்தில் புதிய இந்து மின் சுடலை கட்டுவதற்கு மடானி அரசாங்கம் 25 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கி உள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்திய சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக கெடா மாநில இந்திய சமூகம் முன் வைத்த கோரிக்கை, விண்ணப்பங்களுக்கு செவி சாய்த்து இந்த மிகப்பெரிய மானியம் வழங்கப்படுகிறது.
பிரதமருடன் தாம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பூர்த்தி அடையும்.
மடானி அரசாங்கம் மானியம் வழங்கியது போக நிதி பற்றாக்குறை நிலவினால் ஆலய நிர்வாகமே அதற்கான பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டும் .
இந்த புதிய மின் சுடலை கட்டுவதற்கு நிலம் மற்றும் அரசு அலுவலக அனுமதிகள் தொடர்பான பணிகள் உடனடியாக தொடங்கப்படும். மேலும் இந்த பணிகளை நிர்வாகமே மேற்கொள்ளும்.
தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்ட முயற்சிகளின் பலனாக இப்போது இதற்கு நல்ல தீர்வு பிறந்துள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்கும் குறிப்பாக இந்து சமூகத்திற்குமான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மடானி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை காட்டி வருகின்றன.
கெடா மாநிலத்தின் சுங்கை பட்டானி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் கோவில் நிர்வாகம் அமைக்கப்படவுள்ள புதிய மின் சுடலை திட்டத்தின் பணிகள் தற்போது சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய மின் சுடலை திட்டம் மடானி அரசின் முயற்சியின் கீழ் நிதி அமைச்சு வழியாக அனுமதி பெற்றதாகவும், இந்து சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மின் சுடலை வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் நோக்கத்துடன் இணைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த திட்டம் பிரதமர் அறிவித்த முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும். கடந்த 2024 செப்டம்பர் 25 அன்று தீபாவளி சிறப்பு அறிவிப்பின் போது, நாட்டின் பல மாநிலங்களில் இந்திய சமூகத்திற்கான புதிய மின் சுடலை வசதிகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
