செய்திகள் மலேசியா
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
டுங்குன்:
ஹரிராயா கொண்டாட்டத்திற்காக செய்திருந்த அனைத்து தயாரிப்புகளும், டுங்குன் கம்போங் தானா லோட் பகுதியில் உள்ள வாடகை வீடு தீப்பற்றியதில் சாம்பலானதில் மிகவும் வேதனைப்படுவதாக ஒரு தம்பதி தெரிவித்துள்ளனர்.
36 வயதுடைய முஹம்மத் ரிட்சுவான் அபு பக்கார் கூறுகையில், தானும் அவரது மனைவி சித்தி ஜூலைகா ரம்லியும் இந்த ஆண்டு ராயாவுக்கு சிவப்பு நிற ஆடைகளை அணியத் திட்டமிட்டிருந்தனர்.
ரமலான் தொடங்குவதற்கு முன்பே பாஜு மலாயு, பாஜு குருங் ஆடைகளை முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் அந்த ஆடைகள் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து போயின என்றும் கூறினார்.
மேலும் ராயாவுக்காக தயாரித்த பல வகையான பலகாரங்களும், வீட்டில் வைத்திருந்த ராயா பணமும் தீ விபத்தில் அழிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற போது தம்பதியினர் இருவரும் தங்களது வேலை இடங்களில் இருந்ததாகவும், நண்பர் ஒருவரின் அழைப்பின் மூலம் தான் விபத்து பற்றி அறிந்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், தீயணைப்பு துறையினர் காலை 8.21 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றனர்.
இரண்டு வாகனங்களுடன் 21 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை காலை 9.02 மணிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பின்னர் முழுமையாக அணைத்தனர்.
வீடு முழுமையாக சேதமடைந்த நிலையில், தீ விபத்தின் காரணமும், இழப்பின் அளவும் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
