செய்திகள் மலேசியா
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
மலாக்கா:
தங்கா பத்து பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் முன்பாக சஹூர் நேரத்தில் இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சுமார் 20 பேர் வரை இந்த மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் தலைக்கவசத்தை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு நிமிடம் 21 வினாடிகள் கொண்ட காணொலியில், ஒருவரை தலைக்கவசத்தால் பலமுறை தாக்கியதன் பின்னர் அவர் மயக்க நிலையில் தரையில் விழுந்து கிடப்பது காணப்படுகிறது.
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஒருவர் தொடர்புடையதாக கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து மலாக்கா மாநில காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
