நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் கால்பதிப்பதற்கு எஸ்டிபிஎம் சிறந்த தேர்வாகும்: சுரேன் கந்தா

பெட்டாலிங் ஜெயா:

அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் கால்பதிப்பதற்கு எஸ்டிபிஎம் சிறந்த தேர்வாக அமைகிறது.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு முன் டான்ஸ்ரீ தம்பிராஜா இந்த எஸ்டிபிஎம் விழிப்புணர்வை இந்திய மாணவர்களிடையே ஏற்படுத்தினார்.

தற்போது அரசு பல்கலைக்கழகங்களில் பயில மெட்ரிகுலேசன் வாய்ப்பு கிடைப்பது இல்லை என்ற பிரச்சினைகள் பரவலாக உள்ளது.

ஆனால் அரசு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல எஸ்டிபிஎம் சிறந்த வாய்ப்பு என்பதை நமது மாணவர்கள் புரியவில்லை.

தேர்வு கடினமானது என்ற காரணத்தால் நமது மாணவர்கள் எஸ்டிபிஎம் கல்வி வாய்ப்பை ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனால் சிரமப்பட்டு படித்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

இதன் அடிப்படையில் தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மீண்டும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான கல்விப் புரட்சியை தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக 50 மாணவர்களுடன் இந்த புரட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்திய மாணவர்கள் எஸ்டிபிஎம் கல்வி வாய்ப்பை தேர்வு செய்ய தூண்டுவது முதல் நோக்கமாகும்.

அதே வேளையில் அனைத்து இந்திய மாணவர்களும் எஸ்டிபிஎம் தேர்வில் 4.0 தேர்ச்சியை பெற வேண்டும்.

இதன் மூலம் அம்மாணவர்களுக்கு தேர்வு செய்யும் பல்கலைக்கழகமும் துறையும் கிடைக்கும்.

இதுவே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்காகும் என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset