நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸில் பட்டப் பகலில் நகைக் கடையில் கொள்ளை: ஆயுதமேந்திய கும்பல் அராஜகம்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸில் உள்ள சென்ட்ரல் சூட்ஸ் பகுதியில்ஆயுதமேந்திய  கும்பல் ஒன்று நகைக்கடையில் கொள்ளையடித்துள்ளது.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தில் அக்கும்பல் பாதுகாப்பு ஊழியரைத் தாக்கி, சில நிமிடங்களிலேயே ஏராளமான மதிப்புமிக்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

சமூக வலைத் தளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகளின்படி, காலை சுமார் 10.48 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முகமூடி அணிந்த நான்கு நபர்கள் ஒரு வெள்ளை நிற நிசான் அல்மேரா காரில் வந்து இச்சம்பவத்தை செய்துள்ளனர்.

கைத்துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களை ஏந்தியிருந்ததாக நம்பப்படும் சந்தேக நபர்கள், முதலில் கடைக்கு வெளியே பணியில் இருந்த ஒரு பாதுகாப்பு ஊழியரைத் தாக்கினர்.

பின்னர் கேவிடி கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் கடைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

உள்ளே நுழைந்ததும் அந்தக் கும்பல் ஊழியர்களை மிரட்டி, மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையின் மூலம் நகைகளை விரைவாகக் கொள்ளையடித்தது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் சில நிமிடங்களிலேயே நடத்தப்பட்டு, சந்தேக நபர்கள் அதே வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்குள் சென்ட்ரல் சூட்ஸ்  பகுதியில் நடந்த இரண்டாவது வன்முறைச் சம்பவம் இதுவாகும்.

2025 ஜூன் மாதத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நள்ளிரவில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  இருவர் காயமடைந்தனர்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து போலிசாரிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset