செய்திகள் மலேசியா
மாணவிக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு
அலோர் ஸ்டார்:
கடந்த ஆண்டு, 15 வயதுடைய ஒரு மாணவிக்கு உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஒரு உஷு பயிற்சியாளர் இன்று இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
59 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட யாங் சின் சியோங், நீதிபதி என். பிரிசில்லா ஹேமமாலினி முன்னிலையில் வழக்கு மொழிபெயர்ப்பாளரால் தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், குற்றமற்றவர் என மறுத்துள்ளார்.
குற்றச்சாட்டின்படி, கடந்த டிசம்பர் 5, 2025 அன்று மதியம் 1 மணியளவில், இங்குள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில், 15 வயதான அந்த மாணவிக்கு உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a)-ன் கீழ் இந்தக் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை 10,000 ரிங்கிட்டில் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவரையும், வழக்குத் தொடர்பு தரப்பு சாட்சிகளையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.
வழக்கின் மறு விசாரணை அடுத்த மே 18 ஆம் தேதி நடைபெறும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 16, 2026, 3:43 pm
