செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்ஸில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளுடன் ஆயுதமேந்திய கும்பல் தப்பியது: போலிஸ்
கோலாலம்ம்பூர்:
பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு நகைகடையைக் கொள்ளையடித்த நான்கு பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
கோலாலம்பூர் போலிஸ்படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் இதனை தெரிவித்தார்.
இன்று காலை சுமார் 11 மணியளவில் ஜாலான் துன் சம்பந்தன் சாலையில் உள்ள ஒரு கடையில், அடையாளம் தெரியாத நான்கு சந்தேக நபர்கள் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் கடைக்குள் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்து.
சுமார் 15 கிலோ எடையுள்ள 21 தட்டுகளில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
மேலும் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வளாகத்தின் பாதுகாப்பு ஊழியருக்குச் சொந்தமான ஒரு ஷாட்கன், ஒரு தோட்டா காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 395/397 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 16, 2026, 3:43 pm
பிரிக்பீல்ட்ஸில் பட்டப் பகலில் நகைக் கடையில் கொள்ளை: ஆயுதமேந்திய கும்பல் அராஜகம்
April 16, 2026, 3:25 pm
