
செய்திகள் கலைகள்
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
கோலாலம்பூர்:
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமான முறையில் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்றது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் வெளியான அருமையான பாடல்கள் ரசிகர்களுக்கு இசை விருந்தாக படைக்கப்பட்டன.
பாடகர்கள் கார்த்திக், சைந்தவி, நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா, பிரியா ஜெர்சன், ஹரிசரண், ஹரிஷ் ராகவேந்திரா, திவாகர், சாம் விஷால், நிகோலஸ் ஆகியோர் தங்களின் படைப்புகளைச் சிறப்பாக வழங்கினர்.
BGM Medley, Mashups மற்றும் முழு பாடல்கள் என்று மிகச்சிறந்த பாடல்கள் பாடப்பெற்றன.
ரசிகர்களும் ஆட்டம் பாட்டம் என்று இசைநிகழ்ச்சியை மகிழ்ச்சியோடு ரசித்தனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமாக நம்பிக்கை ஊடகம் இருந்தது.
நிகழ்ச்சியை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm