
செய்திகள் மலேசியா
உணவுப் பாதுகாப்பு தேசிய கலாச்சாரமாக மாற வேண்டும்: ஜுல்கிப்லி அஹமத்
புத்ரா ஜெயா:
ஒவ்வொரு வீட்டின் சமையலறை முதல் தொழில்துறை நிலை வரை உணவுப் பாதுகாப்பைத் தேசிய கலாச்சாரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜுல்கிப்லி அஹமத் கூறினார்.
உணவு பாதுகாப்பு என்பது ஒரு உள்நாட்டு பிரச்சனை மட்டுமல்ல.மாறாக, அஃது உலகளாவிய சவால் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 600 மில்லியன் மக்கள் உணவு மூலம் பரவும் நோய்களால் நோய்வாய்ப்படுகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை உணவு நச்சுத்தன்மை வழக்குகளில் 23 சதவீதம் குறைவு (204 வழக்குகள்) இருந்தபோதிலும், முன்னேற்றத்திற்கு இன்னும் அதிக இடம் உள்ளது குறிப்பாக மக்களிடையே உணவு கல்வியறிவை மேம்படுத்துவதில் முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் உணவு பாதுகாப்பு மற்றும் தரத் திட்டத்தின் மூலம், புகை இல்லாத தூய்மையான வளாகங்களை (பீபாஸ்) தூய்மையான மற்றும் பாதுகாப்பான வளாகத்தை (பீஎஸ்எஸ்) அங்கீகரித்தல் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு மையத்தை (என்.சி.எஃப்.எஸ்) இடர் மதிப்பீடு மற்றும் அறிவியல் அடிப்படையிலான கொள்கைகளில் சிறப்புமிக்க மையமாக நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm