
செய்திகள் மலேசியா
வாக்குகளை ரகசியமாக கேட்காத அரசியல் தலைவர்கள் உதவிகளை மட்டும் ஏன் ரகசியமாக செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
வாஷிங்டன்:
வாக்குகளை ரகசியமாக கேட்காத அரசியல் தலைவர்கள், உதவிகளை மட்டும் ஏன் ரகசியமாக செய்ய வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இக்கோள்வியை எழுப்பினார்.
அமைதியாக இருப்பதால் இந்திய சமுதாயத்திற்கு ஒன்ரும் செய்யவில்லை என்று அர்த்தமாகி விடாது.
திரைக்கு பின்னால் சமுதாயத்திற்கு பல உதவிகளை செய்து வருகிறேன் என்று கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் தான் உண்மையிலேயே அவர் சமுதாயத்திற்கு உதவி செய்திருந்தால் அதை நிரூபிக்க வேண்டும் என நான் கூறியிருந்தேன்.
உடனே இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கி வருகின்றனர். குறிப்பாக கேள்வி எழுப்பும் எனக்கு எதிராக பேசுகின்றனர்.
ஜம்ரி வினோத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான போலிஸ் புகார்கள் செய்யப்பட்டன. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜித் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கிய மெட்ரிகுலேஷன் இருக்கைகள் என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும்.
இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நூருல் இசாவை நான் வலியுறுத்தவில்லை.
இந்திய சமுதாயத்திற்கு அவர் என்ன செய்தார் என்பதை தான் நான் நிரூபிக்க வேண்டும் என கூறுகிறேன்.
காரணம் கடந்த காலங்களில் மஇகாவும் இந்திய சமுதாயத்திற்கு ரகசியமாக பல விஷயங்களை செய்தது.
ஆனால் சமுதாயத்திற்கு அக்கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று தான் இப்போதைய தலைவர்கள் அன்று குற்றம் சாட்டினர்.
ஆகையால் நூருல் இசா என்ன செய்தார் என்பதை வெளியில் சொன்னால் அவருக்கும் இப்போது ஆட்சியில் இருக்கும் மடானி அரசாங்கத்திற்கும் தான் நல்லது.
மேலும் இந்திய சமுதாயத்திற்கான உதவிகளை ஏன் அரசியல் தலைவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும்.
தேர்தல்களில் வாக்குகளை கேட்கும்போது அவர்கள் என்ன ரகசியமாக வா கேட்கிறார்கள்.
இதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் பலர் என்னை சாடி வருகின்றனர்.
அவர்களும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்க என்னையும் விடுவதில்லை.
இதனால் தான் சமுதாயத்திற்காக யாருமே வாய் திறப்பதில்லை என்று அமெரிக்காவில் நடைபெறும் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am