நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் வர்த்தக சீர்திருத்தங்களுடன் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்கும்: பிரதமர்

ரியோ டி ஜெனிரோ:

ஆசியான் வர்த்தக சீர்திருத்தங்களுடன் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், 

உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் குழுவை சீர்திருத்த ஆசியான் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒருதலைப்பட்ச ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட மிகவும் நிலையான நிதி அமைப்பை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சி இதுவாகும்.

நிச்சயமாக இது டாலர் மதிப்பிழப்பு அல்லது அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைப்பது பற்றியது அல்ல.

அந்த நடவடிக்கை இன்னும் வெகு தொலைவில் உள்ளது. ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் முயற்சி செய்கிறோம்.

மேலும் இந்தோனேசியாவுடன் மலேசியா, தாய்லாந்துடன் மலேசியா, சீனாவுடன், மொத்த வர்த்தகத்தில் 10 அல்லது 20 சதவீதத்துடன் தொடங்கும்.

இதன் மூலம் நாங்கள் எங்கள் சொந்த உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்தத் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset