
செய்திகள் மலேசியா
மலேசியர்கள் விசா இன்றி உலகின் 181 நாடுகளுக்கு எளிதாக சென்று வர முடியும்; ஆனால் இந்தியா செல்ல விசா கட்டணமா?: மீண்டும் இந்தியத் தூதரகம் 1 மாத இலவச சுற்றுலா அனுமதி தர பெலித்த இயக்கம் வேண்டுகோள்
பினாங்கு:
மலேசியர்களுக்கு இந்தியாவிற்குச் செல்ல 30 நாள் இலவச விசா அவசியம் நீடிக்கப்பட வேண்டும் என பெலித்தா சமூக நல இயக்கத்தின் புரவலர் முனைவர் ஹாஜி முஹம்மத் நசிர் கூறினார்.
மலேசியா, இந்தியா இரு நாடுகள் பல துறைகளில் தத்தம் நட்புறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்பியுள்ளன.
வர்த்தகம், கல்வி, கலை, கலாசாரம், ஆன்மிகம், சுற்றுலா போன்ற துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு விரிவடைகிறது.
இந்த நிலையில், மலேசியா நாட்டைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு பயணம் செய்வதற்காக 30 நாட்கள் காலத்திற்கான சுற்றுலா விசா (Tourist Visa) சலுகை ஜூலை 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனை மீண்டும் வழங்கவேண்டுமென மலேசியாவுக்கான இந்தியா (High Commissioner of India) தூதரகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மலேசிய பயணிகள் சார்பாக முனைவர் நசீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய நாட்டின் வரலாறு அல்லாமல் கலை கலாசாரமும், மருத்துவம் என பல்வேறு வகையில் நன்மை பயப்பதாக உள்ளது.
மலேசியர்கள் குடும்பப் பயணங்கள், ஆன்மீக யாத்திரைகள், வர்த்தக நோக்கங்களுக்காக இந்தியா செல்லுகின்றனர்.
இவ்வகை விசா அனுமதி (Visa-Free Entry for 30 Days) மீண்டும் அமல்படுத்தினால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
மலேசியா, ஏற்கனவே இந்தியா குடிமக்களுக்கு விசா விலக்கு (Visa Exemption) அளித்து பலருக்கு எளிய பயண அனுபவத்தை வழங்கி வருகிறது.
இது போன்று இந்திய அரசும் மலேசியா நாட்டினருக்காக 30 நாட்கள் இலவச E- விசா பயண அனுமதியை வழங்க வேண்டும் என முனைவர் நசீர் தெரிவித்தார்.
மலேசியாவின் கடப்பிதழ் சக்தி வாய்ந்தது. மலேசியர்கள் விசா இன்றி உலகின் 181 நாடுகளுக்கு எளிதாக சென்று வர முடியும். அப்படி இருக்கையில் நம் தொப்புள்கொடி உறவுள்ள நாடான இந்தியாவிற்கு சென்று வர பணம் கட்டி விசா பெற வேண்டி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள், தங்கள் நாட்டு வெளியுறவு அமைச்சுடன் பேசி இதற்கு வழி காண வேண்டும்.
மலேசியா மக்களுக்கு இத்தகைய விசா சலுகையை மீண்டும் விரைவில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக நசீர் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am