
செய்திகள் மலேசியா
இந்திய முஸ்லிம் பள்ளிவாசல், சூராவ்களின் மாநாடு; செப்டம்பர் மாதத்தில் நடைபெறும்: முஹம்மது காதிர் அலி
கோலாலம்பூர்:
இந்திய முஸ்லிம் பள்ளிவாசல், சூராவ்களின் மாநாடு வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கெபிமாவின் நோற்றுநரும் ஆலோசகருமான முகமது காதிர் அலி இதனை கூறினார்.
நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், சூராவ்கள், இமாம்களின் நலன் காக்கும் நோக்கில் கெபிமாவின் கீழ் சிறப்பு செயலகம் அமைக்கப்பட்டது.
இச் செயலகத்தின் கீழ் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டங்களில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதன் உச்சக்கட்டமாக இந்திய முஸ்லிம் பள்ளிவாசல், சூராவ்களின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் மாநாடு வரும் செப்டம்பர் 13, 14ஆம் தேதிகளில் கூட்டரசுப் பிரதேச பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
பிரதமது துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ ஸ்ரீ நயிம் மொத்தார் இந்த மாநாட்டை தொடக்கி வைக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், சூராவ்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த பள்ளிவாசல்களில் இமாம்களாக சேவையாற்றி வரும் அந்நிய நாட்டினருக்கு பெர்மிட் கிடைப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.
இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது இந்த மாநாட்டில் முக்கிய அங்கமாக இடம் பெற உள்ளது.
இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், உபைதி அறக்கட்டளையின் தலைவர் டத்தோ ஹிஷாமுடின் டான்ஸ்ரீ உபைதுல்லா ஆகியோரின் ஆலோசனையின் கீழ் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
ஆகவே நாடு முழுவதும் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், சூராவ்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டிற்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என முஹம்மது காதிர் அலி கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am