
செய்திகள் மலேசியா
தியோமான் தீவில் முக்குளிக்க சென்ற சிங்கப்பூர் முதியவர் மரணம்: முக்குளிக்கச் செல்வதற்கு முன்னர் உடல்நலம் சரியாக இருப்பதை உறுதிசெய்யும்படி காவல்துறை வேண்டுகோள்
கோல திரங்கானு :
சிங்கப்பூரைச் சேர்ந்த 72 வயது முதியவர் தியோமான் தீவுக்கு (Tioman Island) விடுமுறைக்காகச் சென்றபோது அங்கு உயிரிழந்ததார்.
லோ சூன் ஃபொய் (Low Choon Foi) முக்குளிக்கச் சென்றபோது மாண்டார். அவர் ஓய்வுபெற்ற பொறியாளர்.
நேற்று (5 ஜூலை) காலை 14 நண்பர்களுடன் லோ ஹோட்டலைச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று சிங்கப்பூருக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தனர்.
மாலை சுமார் 6:30 மணியளவில் கம்போங் பாயா கடற்கரையில் லோவும் அவரது நண்பரும் முக்குளிக்கச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. 7:40 மணியளவில் கடற்கரையில் மயக்கநிலையில் கிடந்த லோவை அவரது நண்பர் கண்டார். அவரது வாயில் நுரை தென்பட்டது.
லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மரணத்தை மருத்துவர்கள் இரவு சுமார் 9:20 மணியளவில் உறுதிசெய்தனர்.
லோவின் மரணத்தில் சூது இல்லை என்று மலேசியக் காவல்துறை கூறியது. முக்குளிக்கச் செல்வதற்கு முன்னர் உடல்நலம் சரியாக இருப்பதை உறுதிசெய்யும்படியும் காவல்துறை மக்களிடம் கேட்டுக்கொண்டது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am