
செய்திகள் மலேசியா
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மலேசிய நிறுவனங்கள் புதிய சந்தைகளை ஆராயவும், வெளிநாடுகளில் வர்த்தக வாய்ப்புகளை நாடவும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பாரம்பரிய சந்தைகளை மட்டுமே நம்பி இருக்க கூடாது. மாறாக புதிய சந்தைகளை ஆராய வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், பிரிக்ஸ் போன்ற தளங்கள் மிகப்பெரிய வணிக வாய்ப்புகளை வழங்குகிறது, மேலும் பெட்ரோனாஸ் மற்றும் யின்சன் தயாரிப்பு போன்ற மலேசிய நிறுவனங்கள் பிரேசிலில் வெற்றிகரமான வணிக முயற்சிகளுக்காக பிரதமர் அன்வார் பாராட்டினார்.
ஜூலை 6-7 வரை நடைபெறும் 17-ஆவது பிரிக்ஸ் தலைவர்களின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் அங்குச் சென்றுள்ளார்.
மலேசிய நிறுவனங்கள் தனது நாட்டில் வணிகம் செய்வதைக் கண்டு பிரேசில் அதிபர் ஆச்சரியப்படுவதாக அன்வர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm