
செய்திகள் மலேசியா
30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளை கொண்டுள்ள ஆடவர் சுங்கைப்பட்டானியில் சுட்டுக் கொல்லப்பட்டார்: போலிஸ்
சுங்கைப்பட்டானி:
30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளை கொண்டுள்ள ஆடவர் சுங்கைப்பட்டானியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை செயல் இயக்குநர் ஃபாடில் மார்சஸ் இதனை தெரிவித்தார்.
ஜித்ராவில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு நபர்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரை போலிசார் சுட்டுக் கொன்றனர்.
நேற்று இரவு 7.50 மணியளவில் பண்டார் புத்ரி ஜெயாவில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 34 வயதான சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது புக்கிட் அமான் போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையாகும்.
இதில் சிஐடி தலைமையிலான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பல மாநிலக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பல மாநிலங்களில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒருவரைக் கண்டுபிடித்தோம்.
அவரைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் தான் அவர்கள் கொல்லப்பட்டனர்.
சந்தேக நபரை பரிசோதித்ததன் விளைவாக, போலிசார் ஒரு துப்பாக்கி உட்பட பல பொருட்களைக் கண்டுபிடித்தனர்.
மேலும் சந்தேக நபருக்கு 30க்கும் மேற்பட்ட குற்றப் பின்னணிகள் உள்ளது.
குறிப்பாக 2022 முதல் தங்கக் கடைகளைக் கொள்ளையடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு குற்றவியல் குழுவுடன் தொடர்புடையவர்.
இதனால் கிட்டத்தட்ட 6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஃபாடில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am