நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்

புத்ரா ஜெயா:

பாலி நீரிணையில் கடந்த புதன்கிழமை இரவு பயணிகள் ஃபெரி மூழ்கிய சம்பவத்தில் விபத்தில் ஒரு மலேசியர் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுவதாக வெளியுறவு அமைச்சு, விஸ்மா புத்ரா கூறியது.

ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம், அமைச்சகத்தின் தூதரகத் துறை மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து இது குறித்த கூடுதல் தகவலை பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளை விஸ்மா புத்ரா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

12 பணியாளர்கள், 53 பயணிகள் மற்றும் 22 வாகனங்களை ஏற்றிச் சென்ற KMP Tunu Pratama Jaya என்ற ஃபெரி புதன்கிழமை இரவு பாலி நீரிணையில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset