செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
அட்லான்டா:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு பிஎஸ்ஜி அணியினர் முன்னேறி உள்ளனர்.
மெர்சடிஸ் பென்ஸ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் பாயர்ன்முனிச் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை டெசாரே டோஃவ், ஓஸ்மனே டெம்பள் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ஆட்டத்திற்கு முன்னேறினார்.
பாயர்ன் முனிச் அணியினர் தோல்வி கண்டு வெளியேறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 1:50 pm
மெஸ்ஸி முடிவெடுத்துவிட்டார்: பரேடேஸ்
July 26, 2026, 1:17 pm
ஜெர்மனி அணியின் பயிற்சியாளராக ஜர்கன் குளோப் நியமனம்
July 25, 2026, 12:07 pm
புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கம் ஓடுதள பாதையின் முதல் பகுதி அகற்றும் பணி தொடக்கம்
July 24, 2026, 8:29 am
அர்ஜென்டினாவுக்கு வழிகாட்டும் ஆற்றல் மெஸ்ஸிக்கு உள்ளது
July 24, 2026, 8:26 am
