நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

80,000 ரசிகர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்

போனஸ் அயர்ஸ்:

கிட்டத்தட்ட 80,000 ரசிகர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் அரங்கத்தில் ஸ்பெயினிடம் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து.

இதைத் தொடர்ந்து, 2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று பிபாவை வலியுறுத்தி 80,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணையவழி மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

Change.org தளத்தில் அர்ஜெண்டினா ரசிகையான கிசெலா சான்செஸ் என்பவரால்  இந்த மனு தொடங்கப்பட்டது.

ஸ்லோவேனிய நடுவர் ஸ்லாவ்கோ வின்சிக் போட்டி முழுவதும் சர்ச்சைக்குரிய, பாரபட்சமான நடுவர் பணியை வெளிப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இருப்பினும், இந்தக் கூற்றுக்கு சரிபார்க்கப்பட்ட எந்த ஆதாரமும் இல்லை; மாறாக, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, ஸ்பெயினுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறப்படும் பல காணொலிப் பதிவுகளை மட்டுமே இது குறிப்பிடுகிறது.

இதுவரை இந்த மனு 80,700-க்கும் மேற்பட்ட கையொப்பங்களைச் சேகரித்துள்ளது.

ஆனால் இது போட்டியின் முடிவிலோ அல்லது உலக சாம்பியன் என்ற ஸ்பெயினின் அந்தஸ்திலோ சட்டரீதியாகவோ அல்லது விளையாட்டு ரீதியாகவோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset