
செய்திகள் இந்தியா
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
புனே:
மகாராஷ்டிராவின் புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். அப்போது பேசிய துணை முதல்வர் ஷிண்டே, ‘ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் குஜராத்’ என்று கோஷமிட்டார். அமித்ஷாவும் குஜராத்தி மொழியில் தனது உரையை நிகழ்த்தினார்.
‘ஜெய் குஜராத்’ என ஷிண்டே முழக்கமிட்டது சர்ச்சை ஆனது. மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஷிண்டே மேடையில் உரக்க சொன்னது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகும். ஒன்றிய பாஜ அரசு அனைத்து திட்டங்களையும் குஜராத்துக்கே மாற்றி விடுவதாக மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், ஷிண்டே இவ்வாறு கூறியது பாஜவுக்கு அவர் அடிமையாக இருப்பதை காட்டுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
தனது பதவியையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள மகாராஷ்டிராவை அவமதித்த ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தின.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm