செய்திகள் மலேசியா
மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்: அன்பளிப்பு பொருட்கள் வழங்கல் விழா
கோலாலம்பூர்:
அம்பாங், பண்டான் இண்டாவிலுள்ள திரியும்ப் மண்டபத்தில் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராஸி மற்றும் அம்பாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து நடத்திய "மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்" எனும் நிகழ்வின் வழி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும், ஒரு பகுதி உணவுப் பொருட்களை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கபட்டது.
கடந்த தீபாவளி காலங்களில் மட்டுமில்லாது அனைத்து விழாக்காலங்களிலும் மூவின மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றிவருகின்றனர் இந்தக் குழுவினர்.
நாட்டில் மக்களிடையே நிலவி வரும் வறுமையைத் துடைதொழிக்க எடுத்த முயற்சியாக நோய்த் தொற்று காலம் தொடங்கி அதிகமான குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கத் தொடங்கியதாக சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த டத்தோஸ்ரீ ஜெயந்திரனுக்கும் மலேசிய கெஸட் நிருபர் கஸ்தூரி ஜீவனுக்கும் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராஸி துணைத் தலைவர் மோகன்ராஜ் வில்லவன் நினைவு அன்பளிப்பை வழங்கி சிறப்பித்தார்.
அம்பாங் வாட்டாரத்தில் இளைஞர்கள் கூட்டணியின் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அனைவரும் நாட்டின் செயல்பாட்டுத் தர விதிமுறைகளை முறையாக பின்பற்றி கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
January 15, 2026, 1:03 pm
பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் அம்னோவிற்கு வரவேற்க ஜாஹித் தயாராக உள்ளார்: புவாட்
January 15, 2026, 11:25 am
அம்னோ மாநாட்டில் கைரி ஜமாலுத்தீன்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
